• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜெயலலிதாவிற்குப் பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் - நடிகர் சித்தார்த்

ஜெயலலிதாவிற்குப் பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் - நடிகர் சித்தார்த்

மு.க.ஸ்டாலின் | சித்தார்த்

மு.க.ஸ்டாலின் | சித்தார்த்

ஜெயலலிதாவுக்குப் பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த்.

  • Share this:
ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களம் கண்டது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் திமுக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறின. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தி.மு.க கூட்டணி 150 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்துவருகிறது. அதனால், மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதியாகியுள்ளது.

தமிழக முதமைச்சராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் ரஜினி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், “ஜெயலலிதாவுக்குப் பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். நல்ல ஆட்சியைக் கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் உங்களை எதிர்பார்ப்புகளுடனும், கேள்விகளுடனும் எதிர்நோக்கி இருக்கிறோம். தமிழ் வாழ்க” என்று கூறியுள்ளார்.

நடிகர் சூரி தனது ட்விட்டர் பதிவில், “40 வருட கடின உழைப்பிற்கும் ,பொறுமைக்கும் பலனாக 6 வது முறை தி.மு.க சார்பில் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் கழக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சிபிராஜ், “இது கொண்டாட்டத்துக்கான நேரம். நமது புதிய முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கிறேன். சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இதயப்பூர்வமான நன்றி. புதிய அரசுக்கு எனது வாழ்த்துகள். மிகத்தகுதியான வெற்றி”என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: