Home /News /entertainment /

உடல் உறுப்பு தானம் அறிவித்த நடிகை மீனா… கணவர் குறித்து உருக்கமான பதிவு

உடல் உறுப்பு தானம் அறிவித்த நடிகை மீனா… கணவர் குறித்து உருக்கமான பதிவு

கணவர் வித்யாசாகருடன் நடிகை மீனா.

கணவர் வித்யாசாகருடன் நடிகை மீனா.

உயிர்களைக் காப்பாற்றுவதை விட சிறந்த செயல் எதுவும் இருக்க முடியாது. உடல் தானம் செய்வது என்பது உயிர்களைக் காக்கும் உன்னத வழிகளில் ஒன்று. – நடிகை மீனா

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பிரபல நடிகை மீனா உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தனது கணவர் குறித்த உருக்கமான பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த வைரலாகியுள்ளது.

    6 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் மீனா வலம் வந்தார். ரஜினி, கமல், அஜித் உள்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் அவர் இணைந்து நடித்துள்ளார்.

    ரஜினியுடன் முத்து, வீரா, எஜமான், கமலுடன் அவ்வை சண்முகி, தெனாலி உள்ளிட்ட படங்களுடன், தாய் மாமன், நாட்டாமை, நாடோடி மன்னன்,செங்கோட்டை, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    தேசிய விருது அறிவிக்கப்பட்ட ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு

    மீனா வித்யாசாகர் என்பவரை கடந்த 2009-ல் திருமணம் முடித்தார். மென்பொருள் பொறியாளராக வித்யாசாகர் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய்யின் தெறி படத்தில் நடித்திருந்தார்.

    துரதிருஷ்டவசமாக வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஜூன் 27-ம்தேதி உயிரிழந்தார். இந்நிலையில் சர்வதேச உடல் தான தினத்தையொட்டி மீனா உடல் தானத்தை அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மீனா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியருப்பதாவது-



    உயிர்களைக் காப்பாற்றுவதை விட சிறந்த செயல் எதுவும் இருக்க முடியாது. உடல் தானம் செய்வது என்பது உயிர்களைக் காக்கும் உன்னத வழிகளில் ஒன்று.

    நீண்ட கால உடல்நல பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்புகள் தானமாக கிடைப்பது என்பது ஒரு வரம். தனிப்பட்ட முறையில் இதனை நான் உணர்ந்திருக்கிறேன். எனது கணவருக்கு உறுப்புகள் தானமாக கிடைத்திருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.

    ‘நெஜமாவே நான் தான்’ – ட்விட்டரில் முதல் வீடியோவை பதிவிட்ட நடிகர் விக்ரம்…

    ஒருவர் உறுப்பை தானம் செய்யும்போது 8 பேர் காற்றப்படலாம். உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அந்த வகையில் எனது உடல் உறுப்புகளை நான் தானம் செய்வதாக அறிவிக்கிறேன். இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு நாம் உயிர் வாழலாம். என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actress meena

    அடுத்த செய்தி