Home /News /entertainment /

இந்தி விக்ரம் வேதாவில் சைப் அலிகானின் முதல் தோற்றம் வெளியீடு

இந்தி விக்ரம் வேதாவில் சைப் அலிகானின் முதல் தோற்றம் வெளியீடு

சைப் அலிகான், ஹிரித்திக் ரோஷன்

சைப் அலிகான், ஹிரித்திக் ரோஷன்

முதலில் விஜய்சேதுபதி வேடத்தில் அமீர்கான் நடிப்பதாகவும் மாதவன் நடித்த வேடத்தில் சைப் அலிகான் நடிப்பதாகவும் கூறப்பட்டது. சில காரணங்களால் அமீர்கான் படத்திலிருந்து விலக, ஹிரித்திக் ரோஷன் உள்ளே வந்தார்.

  • News18
  • Last Updated :
விக்ரம் வேதா படத்தை இந்தியில் புஷ்கர் காயத்ரி ரீமேக் செய்து வருகிறார்கள். மாதவன், விஜய்சேதுபதி நடித்த வேடங்களில் சைப் அலி கானும், ஹிரித்திக் ரோஷனும் நடிக்கின்றனர். ஹிரித்திக் ரோஷனின் தோற்றத்தை ஏற்கனவே வெளியிட்டவர்கள் தற்போது விக்ரமாக நடிக்கும் சைப் அலிகானின் தோற்றத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

தமிழில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற விக்ரம் வேதாவை புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் படத்தை தயாரித்திருந்தது. புஷ்கர் காயத்ரி இதற்கு முன் இயக்கிய இரு திரைப்படங்களும் இந்த அளவு ரசிகர்களை கவரவில்லை. அதேநேரம் விக்ரம் வேதா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் இந்தியிலும் அதனை ரீமேக் செய்யும் வாய்ப்பு புஷ்கர் காயத்ரிக்கு கிடைத்தது.

முதலில் விஜய்சேதுபதி வேடத்தில் அமீர்கான் நடிப்பதாகவும் மாதவன் நடித்த வேடத்தில் சைப் அலிகான் நடிப்பதாகவும் கூறப்பட்டது. சில காரணங்களால் அமீர்கான் படத்திலிருந்து விலக, ஹிரித்திக் ரோஷன் உள்ளே வந்தார். இந்தி ரீமேக்கை தமிழில் படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட், ஃப்ரைடே ஃபிலிம் வொர்க்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.

இதன் முதல் ஷெட்யூல் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது . ஹிரித்திக் ரோஷன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார். பிறகு இந்தியா திரும்பிய அவர்கள் 19 நாட்கள் சைப் அலிகான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்.

Also read... இனி மீம்ஸ் போட்டால் 10 கோடி நஷ்ட ஈடு- பிரபல நடிகர் எச்சரிக்கை



இந்நிலையில் சைப் அலிகானின் தோற்றத்தை வெளியிட்டிருக்கிறார்கள். வெள்ளை நிற டி-ஷர்ட்டும் நீல நிற ஜீன்ஸும் அணிந்து கண்ணில் குளிர்கண்ணாடி உடன் அட்டகாசமாக தோன்றுகிறார் சைப் அலிகான். செப்டம்பர் 30ஆம் தேதி படத்தை வெளியிடுவது என ஏற்கனவே முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி