சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் சிபி இயக்கத்தில் அனிருத் இசையில் டான் படம் உருவாகியுள்ளது.
டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படத்திலும், சிவகார்த்திகேயனுடன் நடிகை பிரியங்கா மோகன் ஜோடி சேர்ந்துள்ளார்.
படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயேன் நியூஸ் 18க்கு பிரத்யேக நேர்காணல் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருவர் ஹீரோவாக, பாடலாசிரியராக வெற்றி பெற முடியும். சினிமாவுக்கு வர வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது. கிடைக்கும் வாய்ப்புகளை மிக சரியாக பயன்படுத்துவதில் கவனம் செலுத்தினேன்.
இதையும் படிங்க - தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் தோனி… என்ன ரோல் தெரியுமா?
டான் படத்தில் எமோஷன் காட்சிகள் உள்ளன. அதற்காகத்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். எமோஷன் காட்சிகள்தான் இயக்குனர் சிபியின் பலம் என்று நினைக்கிறேன். அதே நேரம் கல்லூரி சம்பவங்களை பெரிதாக காட்ட வேண்டும் என்று முடிவு செய்து பணியாற்றினோம்.
பிரியங்கா மோகனுக்கு நிறைய காட்சிகள் உள்ளன. டாக்டர் படத்தில் அவர் என்னுடன் நடித்தார். தமிழ் உச்சரிப்பு, ஹியூமர் சென்ஸ், நடிக்கும் பாடல் ஹிட்டாவது உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு பிரியங்கா மோகன் டான் படத்தில் இடம்பெற்றுள்ளார்.
இதையும் படிங்க - நெட் ஃப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் வெளியானது ‘பீஸ்ட்’
நான் பாடல் எழுதுவதற்கு நண்பர்கள்தான் காரணம். அவர்கள் கேட்கும்போது, எனக்கு அது வேலையாகத் தோன்றாது. நண்பர்களுக்காக பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம்தான் எனது மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.
டாப் ஹீரோ என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு பிடித்த சப்ஜெக்ட்டில் சிறப்பாக படம் எண்ண வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறேன். சினிமா வர்த்தகத்தை பொருத்தவரையில் அவர்கள் ரேங்க் குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களை கூடாது என்று நம்மால் சொல்ல முடியாது.
எனது எல்லா நேரங்களிலும் எனக்கு ஆதரவாக ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் அவர்களை எனக்கு பிடித்திருக்கிறது. நான் உங்களை கொண்டாடுகிறேன். நீங்கள் என்னை கொண்டாடுங்கள். இந்த உறவு எப்போதுமே தொடரட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.