தர்பார் படத்துக்குப் பின்... ரஜினியின் அடுத்த திட்டம் இதுதான்!

ரஜினிகாந்துக்கு கதை சொன்னவர்களின் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபட்டன.

news18
Updated: August 11, 2019, 6:36 PM IST
தர்பார் படத்துக்குப் பின்... ரஜினியின் அடுத்த திட்டம் இதுதான்!
ரஜினிகாந்த்
news18
Updated: August 11, 2019, 6:36 PM IST
பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அதற்கான புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கிடையே தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்துக்கான கதைகளைக் கேட்பதில் ஆர்வம்காட்டி வந்தார் ரஜினிகாந்த். அவருக்கு கதை சொன்னவர்களின் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபட்டன. ஆனால் இன்னும் தான் நடிக்க இருக்கும் படத்தை ரஜினிகாந்த் முடிவு செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.


ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இமயமலை செல்லும் ரஜினிகாந்த் ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலை சென்று ஒருவாரத்துக்கும் மேல் தியானத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதத்தில் அவர் இமயமலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வீடியோ பார்க்க: யூடியூப்பில் வியூவ்ஸை அதிகரிக்க ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரா?

First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...