புல்லட் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அடுத்த தெலுங்கு பாடலுக்கு சிம்பு ரெடியாகியுள்ளார். இந்த பாடலின் புரொமோ வீடியோ வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகத்துடன் வலம் வருபவர் சிம்பு. சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் சரியாக அமையாத நிலையில், மாநாடு படத்தின் மூலமாக அதிரடியாக சிம்பு கம்பேக் கொடுத்தார். இதன்பின்னர் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.
இதற்கிடையே, லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொதினேனி நடிப்பில் வெளிவந்த தி வாரியர் படத்தில், புல்லட் என்ற பாடலை சிம்பு பாடியிருந்தார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
தேவதையாய் தீபிகா படுகோன்... கவனம் பெறும் புகைப்படங்கள்!
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இந்த பாடல் இரு மொழியிலும் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து, தெலுங்கில் அடுத்த பாடலை சிம்பு பாடியிருக்கிறார். இதுதொடர்பான புரொமோ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Here's a sneak peek of #TimeIvvuPilla song recording with @SilambarasanTR_ 🤩
Stay tuned... Full song on DEC 5th!💕#ThankYouSTR ~ #STRFor18Pages 🎤#18Pages @aryasukku @actor_Nikhil @anupamahere @dirsuryapratap @GopiSundarOffl #BunnyVas @lightsmith83 @NavinNooli @adityamusic pic.twitter.com/Z57yQwsWqw
— Geetha Arts (@GeethaArts) November 29, 2022
தெலுங்கில் 18 பேஜஸ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் டைம் இவ்வு பில்லா என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த படத்திற்கு மலையாளத்தில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவரும், தேசிய விருது பெற்றவருமான கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
பிரபாஸ் இப்படி செய்வார்ன்னு நினைக்கல... சூர்யா சொன்ன சுவாரஸ்யம்!
18 பேஜஸ் படத்தில் நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிம்பு பாடியுள்ள பாடல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியாகிறது. 18 பேஜஸ் படம் அடுத்த மாதம் 23ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Simbhu, Kollywood