விஜய் பாடலுக்கு கவின் - லாஸ்லியா நடனம்? வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான வி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியில் கவின், சாண்டி, தர்ஷன், முகென் ஆகிய நால்வர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் அதே கேங்கில் இருந்த லாஸ்லியா மட்டும் கலந்துகொள்ளவில்லை.

விஜய் பாடலுக்கு கவின் - லாஸ்லியா நடனம்? வைரலாகும் புகைப்படம்
கவின் - லாஸ்லியா
  • News18
  • Last Updated: October 17, 2019, 7:29 PM IST
  • Share this:
பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் கவின் -லாஸ்லியா இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

105 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல் சீசனில் ஓவியா - ஆரவ் காதல் பார்வையாளர்களிடையே பேசுபொருளாக இருந்ததைப் போல் இந்தமுறை கவின் - லாஸ்லியாவின் காதல் பேசுபொருளானது.

பெரும்பாலான எபிசோடுகளில் கவின் -லாஸ்லியாவின் காதல் கதையும் இடம்பெற்றிருந்தது. தற்போது நிகழ்ச்சி முடிவடைந்திருக்கும் நிலையில் சக போட்டியாளர்கள் தாங்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் கவின் - லாஸ்லியா இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை.


கடந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான வி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியில் கவின், சாண்டி, தர்ஷன், முகென் ஆகிய நால்வர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் அதே கேங்கில் இருந்த லாஸ்லியா மட்டும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை தயார் செய்து வருகிறது விஜய் டிவி. அதில் கலந்து கொள்வதற்காக கவின் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து வந்துள்ளார். லாஸ்லியா மாடர்ன் புடவையில் வந்துள்ளார். படப்பிடிப்பின் போது இருவரும் அருகருகே அமர்ந்துள்ளனர்.அதற்கான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த கவின் -லாஸ்லியா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.படிக்க: திருமணம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட லாஸ்லியா!முன்னதாக பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்காக கவின், விஜய் பாடலுக்கு நடனமாடியிருந்த நிலையில் அவருடன் இணைந்து லாஸ்லியாவும் நடனமாடுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.படிக்க : தன்னை ஏமாற்றி சீரழித்த நடிகரை அம்பலப்படுத்திய ஆன்ட்ரியா!

வீடியோ பார்க்க: கட்டிங் வடிவேலு

First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading