லஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்: மீண்டும் சர்ச்சைக் கதையில் நடிக்கும் அமலா பால்!

ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

news18
Updated: October 9, 2019, 12:11 PM IST
லஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்: மீண்டும் சர்ச்சைக் கதையில் நடிக்கும் அமலா பால்!
அமலா பால்
news18
Updated: October 9, 2019, 12:11 PM IST
ஆடை படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரீமேக் ஆக உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ்சில் அமலா பால் நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால்  நடித்து சமீபத்தில் வெளியான படம் ஆடை. பெண் ஒருவர் ஆடையின்றி ஓர் இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டிருந்தது.

படம் வெளியான பிறகு நிர்வாணமாக நடித்திருந்த அமலா பால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் அமலா பால் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார்.


நெட்பிலிக்ஸ் இணையத்தில் ’லஸ்ட் ஸ்டோரீஸ்’ எனும் வெப்சீரிஸ் பெண்களுக்குக் காமத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டைச் சொல்லும் விதமாகக் கடந்த ஆண்டு வெளியானது. இந்தியில் வெளியான இதில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அதில் கியாரா அத்வானி தனது கணவர் மற்றும் மாமியார் முன்பு சுய இன்பத்தில் ஈடுபட்டு சிக்கிக் கொள்வது போன்ற காட்சியில் நடித்திருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால் விமர்சனங்களை எல்லாம் தாண்டி இந்திய அளவில் அதிக பேரால் பார்க்கப்பட்ட வெப்சீரிஸ் எனும் பெருமையை லஸ்ட் ஸ்டோரிஸ் பெற்றது.

இந்நிலையில் இந்த சீரீஸை தெலுங்கில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். நான்கு கதைகள் கொண்ட இந்த படத்தை நான்கு வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

Loading...

இந்த படத்தில் அமலா பால், கியாரா அத்வானியின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்  ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Also see...

First published: October 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...