ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் தொடங்கியது ரஜினி - கமல் படங்களுக்கு இடையே வசூல் போட்டி

மீண்டும் தொடங்கியது ரஜினி - கமல் படங்களுக்கு இடையே வசூல் போட்டி

ரஜினி - கமல்

ரஜினி - கமல்

விக்ரம் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்து வருவதால் தமிழகத்தில் நிச்சயம் 100 கோடி வசூலை தாண்டும் என்று சினிமாதுறையினர் கூறுகின்றனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினி-கமல் படங்களுக்கு இடையே வசூல் போட்டி எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் உச்ச நட்சத்திரங்களாக கொண்டாடப்படுகின்றனர். ரஜினிகாந்த் கமர்ஷியல் பாதையிலும், கமல்ஹாசன் புதிய தொழில்நுட்பம், கதைகளில் புதுமை எனவும் பயணித்தனர்.

ரஜினி - கமல் இருவரும் நண்பர்களாக வலம்வந்தாலும், மறைமுகமாக தொழில் போட்டி இருந்ததாகவே சினிமா துறையினர் கூறிவந்தனர்.

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் படங்கள் வெற்றிபெற்றாலும், வசூல் நிலவரத்தில் ரஜினிகாந்த் முன்னிலையிலேயே இருந்துவந்தார். குறிப்பாக 90களுக்குப் பிறகு ரஜினிகாந்தின் திரைப்படங்கள் வசூல் ரீதியில் மாபெரும் சாதனை படைத்து வந்தன.

கடந்த 20 ஆண்டுகளில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் படங்கள் ஒரே நாளில் வெளியாவது குறைந்துவிட்டன. இறுதியாக சந்திரமுகி - மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் வெளியாகின. அதிலும் நடிகர் ரஜினிகாந்தே வெற்றியடைந்தார்.

இதன்பின் ரஜினிகாந்தின் சிவாஜி, எந்திரம், 2 பாயிண்ட் ஓ படங்கள் பிரமாண்ட வசூலை குவித்தன. அதிலிம் 2.0 படம் உலக அளவில் 750 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

அதேபோல் கமல்ஹாசன் விஸ்வரூபம், உத்தமவில்லன் போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்ததார். இதில் விஸ்வரூபம் பல சர்ச்சைகளை சந்தித்து வசூல் ரீதியில் வெற்றியடைந்தது. இருந்தாலும் ரஜினிகாந்தின் எந்திரன் வசூலை முறியடிக்க முடியவில்லை.இதனால் கமல் ரசிகர்கள் கனவு நிறை வேறமலே இருந்தது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் விக்ரம் படம் வசூலில் பெரும் சாதனை நிகழ்த்தும் என சினிமா துறையில் கூறுகின்றனர்.

அதில் முதல்கட்டமாக விக்ரம் படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் 22 கோடி ரூபாய் இலக்கை அடைந்தது. இதன் மூலம் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துடைய முதல் நாள் வசூலான 23 கோடியை நெருங்கியது. அதேபோல் கேரளாவில் 5.9 கோடி ரூபாயும், ஆந்திரா - தெலங்கானாவில் 4.80 கோடியும், கர்நாடகாவில் 3 கோடியே 30 லட்சமும் வசூல் செய்தது.

இதையடுத்த்ஜ் இரண்டாம் நாள் தமிழகத்தில் 18 கோடி வசூல் செய்தது. மேலும் மூன்றாம் நாள் 20 கோடியை தாண்டும் என்று கூறுகினர். இதன் மூலம் மூன்று நாட்களில் 60 கோடியை தாண்டுகிறது விக்ரம். இது வேறு எந்த கமல்ஹாசன் படங்களுக்கும் நிகழ்ந்தது கிடையாது.

Also read... ராட்சசி பட இயக்குநருடன் இணைந்த அருள்நிதி...!

விக்ரம் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்து வருவதால் தமிழகத்தில் நிச்சயம் 100 கோடி வசூலை தாண்டும் என்று சினிமாதுறையினர் கூறுகின்றனர்.

அதன் மூலம் அண்ணாத்த படத்தின் வசூலை விக்ரம் தாண்டும். இதனால் கமல்ஹாசனின் பல ஆண்டுக கனவு விக்ரம் மூலம் நிறைவேறுகிறது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இதனால் கமல்ஹாசன் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kamal Haasan, Rajini Kanth