Home /News /entertainment /

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் நடிக்கும் சாமானியன்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் நடிக்கும் சாமானியன்!

ராமராஜன்

ராமராஜன்

ராமராஜன் கடைசியாக 2012-ம் ஆண்டு 'மேதை' என்ற படத்தில் நடித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் நடிக்க வருகிறார்.

    90-களில் 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'எங்க ஊரு காவல்காரன்', 'என்ன பெத்த ராசா', 'கரகாட்டக்காரன்', 'பாட்டுக்கு நான் அடிமை' போன்ற கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் ராமராஜன். அவரது படங்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டன.

    ராமராஜன் கடைசியாக 2012-ம் ஆண்டு 'மேதை' என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தனிப்பட்ட பிரச்னைகளாலும், பட வாய்ப்புகள் இல்லாமலும் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். ஆனால் அவ்வப்போது அவர் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. தற்போது அவர் மீண்டும் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கிறார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விக்ரம் வெற்றி விழாவில் ட்ரம்ஸ் வாசித்து அசத்திய கமல்!

    இயக்குநர் ராகேஷ் இயக்கும் 'சாமானியன்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனது 2-வது இன்னிங்ஸை ராமராஜன் தொடங்குகிறார். இது ராமராஜன் நடிக்கும் 45-வது படமாகும். இந்தப் படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இதையறிந்த ராமராஜன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி