ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் இயக்குனராக மாறும் எஸ்.ஜே. சூர்யா… கார் ரேஸ் படமாம்… ஹீரோ யார் தெரியுமா?

மீண்டும் இயக்குனராக மாறும் எஸ்.ஜே. சூர்யா… கார் ரேஸ் படமாம்… ஹீரோ யார் தெரியுமா?

எஸ்.ஜே. சூர்யா

எஸ்.ஜே. சூர்யா

கில்லர் படத்திற்கான திரைக்கதையை வடிவமைப்பதில், எஸ்.ஜே. சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகராக கடந்த சில ஆண்டுகளாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் எஸ்.ஜே. சூர்யா. அஜித்தின் வாலி, விஜய்யின் குஷி ஆகிய இவர் இயக்கிய இரண்டு படங்கள் மிகப் பெரும் வரவேற்பை பெற்றன. இன்றைக்குப் பார்த்தாலும், இந்த இரு படங்களும் பிரஷ்ஷான கதையம்சம் கொண்டதாகவே காணப்படும்.

  இதன் பின்னர் நியூ, அன்பே ஆருயிரே மற்றும் இசை ஆகிய 3 படங்களை எஸ்.ஜே. சூர்யா இயக்கினார். இந்த 3 படங்களிலுமே இவர் ஹீரோவாக நடித்தார். தனக்கு படத்தை இயக்குவதை விடவும், ஹீரோவாக நடிப்பதில் தான் அதிக ஆர்வம் என்று எஸ்.ஜே. சூர்யா பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

  மஞ்சள் மேகம்! நடிகை ஈஷாவின் ப்ரீ தீபாவளி செலிபிரேஷன் போட்டோஸ்

  இந்த நிலையில் 2015ஆம் ஆண்டில் இயக்கிய இசை படத்திற்கு பின்னர், தற்போது மீண்டும் எஸ்.ஜே. சூர்யா படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ‘கில்லர்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  கார் ரேஸை மையமாகக்கொண்டு இந்த படம் உருவாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்காக சொகுசு கார் ஒன்றை கில்லர் படக்குழுவினர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  கில்லர் படத்திற்கான திரைக்கதையை வடிவமைப்பதில், எஸ்.ஜே. சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த பணிகள் முடிவு பெற்றதும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலும் அவரே ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

  லண்டன் அழகில் மயங்கிய அமலா பால்.. வைரல் போட்டோஸ்

  எஸ்.ஜே. சூர்யா தற்போது விஷால் நடிப்பில் உருவாகிவரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதேபோன்று சங்கரின் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகிவரும் ‘ராம்சரண் 15’ படத்திலும் எஸ்.ஜே. சூர்யா இடம்பெற்றுள்ளார். இதேபோன்று பொங்கலையொட்டி வெளியாக உள்ள விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: SJSurya