ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு ரிலீஸ்.. ஒரு நாள் முன்னாடி.. விஜய்யின் வாரிசு படக் குழு போட்ட பக்கா ப்ளான் இதுதான்!

துணிவு ரிலீஸ்.. ஒரு நாள் முன்னாடி.. விஜய்யின் வாரிசு படக் குழு போட்ட பக்கா ப்ளான் இதுதான்!

விஜய் மற்றும் அஜித்

விஜய் மற்றும் அஜித்

அஜித் - எச்.வினோத் கூட்டணில் உருவாகும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்துள்ளது.  இதைத்தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இயக்குனர் எச்.வினோத் கவனம் செலுத்தி வருகிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தை அஜித்தின் துணிவு படத்திற்கு முந்தைய நாள் வெளியிட திட்டமிடுகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித் - எச்.வினோத் கூட்டணில் உருவாகும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்துள்ளது.  இதைத்தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இயக்குனர் எச்.வினோத் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த திரைப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியிட போனி கபூர் ஆலோசித்து வருகிறார்.  அதுவும் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.

இந்த நிலையில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. ஆனால் அந்த படம் எந்த தேதியில் வெளியாகிறது என்று முடிவாகாமல் இருந்தது.

இந்த நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு முந்தைய நாள், ஜனவரி 11-ம் தேதியே வாரிசு திரைப்படத்தை வெளியிட வேண்டும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான தீவிர ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன.  இருந்தாலும் இரண்டு படங்களும் ஒரே நாள்தான் வெளியாகும் என்ற மற்றொரு தகவலும் திரைத்துறையில் வலம் வருகிறது.

Also read... வாரிசு லேட்டஸ்ட் அப்டேட்... விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

துணிவு மற்றும் வாரிசு ஆகிய படங்களின் உறுதியான வெளியீட்டு தேதி,  இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவாகிவிடும் என கூறப்படுகிறது.

கடந்த 2014 –ஆம் ஆண்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா படங்கள் பொங்கல் அன்று வெளியாகி, இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இதன் பின்னர் 8 ஆண்டுகளாக இரு உச்ச நடிகர்களிடையே போட்டி ஏற்படாமல் இருந்தது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Actor Vijay