ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஐஸ்வர்யா இயக்கும் அடுத்தப் படம்.. முக்கிய வேடத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?

ஐஸ்வர்யா இயக்கும் அடுத்தப் படம்.. முக்கிய வேடத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?

ஐஸ்வர்யா - ரஜினி

ஐஸ்வர்யா - ரஜினி

Aishwarya Rajinikanth | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் புதிய திரைப்படத்தின் நவம்பர் முதல் வாரம் நடைபெறுகிறது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நவம்பர் முதல் வாரம் நடைபெறுகிறது.

  தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மிகப்பெரிய பிரபலமடைந்தன.  அந்தப் படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்திக் - பிரியா ஆனந்த் நடிப்பில் வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. இதன் பிறகு சினிமாவில் பணியாற்றும் சண்டை பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசு தேசிய விருது வழங்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து சினிமா வீரன் என்ற ஆவண திரைப்படத்தை இயக்கினார்.

  அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் அந்த ஆவணப்படம் வெளியான பிறகு தேசிய விருது பட்டியலில் சண்டை பயிற்சி கலைஞர்களுக்கு இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன் பின் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லைகா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.  அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

  Read More: 'மூடநம்பிக்கை உடைஞ்சுது.. ஹார்ட் அட்டாக்தான் வரப்போகுது' - காந்தாராவை பாராட்டித்தள்ளிய ராம்கோபால் வர்மா

  மேலும் நவம்பர் முதல் வாரத்தில் இந்தப் படத்திற்கான பூஜை நடைபெற உள்ளது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

  நடிகர் ரஜினிகாந்த் லைகா தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.


  Read More: கதை பிடித்துவிட்டது.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு ?!  விரைவில் அறிவிப்பு!

  இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த  திரைப்படம்  லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Aishwarya Rajinikanth, Rajinikanth