முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 18 ஆண்டுகளுக்கு பின் கமல் - ரஜினி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்? கோலிவுட்டில் பரபரப்பு…

18 ஆண்டுகளுக்கு பின் கமல் - ரஜினி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்? கோலிவுட்டில் பரபரப்பு…

ஜெயிலர் - இந்தியன் 2

ஜெயிலர் - இந்தியன் 2

2005ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் சந்திரமுகி திரைப்படமும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

18 ஆண்டுகளுக்கு பின்னர் கமல் மற்றும் ரஜினியின் படங்கள் நேருக்கு நேராக மோத வாய்ப்பு உள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. கமலின் இந்தியன் 2 திரைப்படமும், ரஜினியின் ஜெயிலரும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் சந்திரமுகி திரைப்படமும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. இவற்றில் சந்திரமுகி 500 நாட்களை கடந்து ஓடியது. அதேநேரம் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இதன் பின்னர் ரஜினி-கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் ஜெயிலர் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். அவரது முந்தைய படமான பீஸ்ட் ஏமாற்றம் அளித்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலரில் ரஜினியுடன் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதேபோன்று இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஆந்திராவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளனர். இந்தியன் 2 படத்தில் அதிக எண்ணிக்கையில் நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். 1996-ல் இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியானது. 27 ஆண்டுக்கு பின்னர், 2ஆம் பாகம் உருவாக்கப்படுவதாலும், இயக்குனர் ஷங்கர் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

First published:

Tags: Rajinikanth