Home /News /entertainment /

ஐந்து நாயகிகளுடன் தயாராகும் சைக்கோ கில்லர் திரைப்படம்...!

ஐந்து நாயகிகளுடன் தயாராகும் சைக்கோ கில்லர் திரைப்படம்...!

ஏவாள்

ஏவாள்

ஜித்தேஷ் கருணாகரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை புதுச்சேரி, மற்றும் கேரளா பகுதிகளில் நடத்தியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
தமிழில் த்ரில்லர் படங்கள் அதிகளவில் தயாராகின்றன. அதில் முக்கியமான ஒன்று ஏவாள். அங்காடித் தெரு நாயகன் மகேஷ் நடித்திருக்கும் இந்தப் படம் சைக்கோ கில்லரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

ஏவாள் படத்தின் முக்கியமான விஷயம், இதில் மொத்தம் 5 பேர் நாயகிகளாக நடித்துள்ளனர். முதலாவது மோக்ஷா. இவர் பரதநாட்டிய கலைஞர். பெங்காலி, தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஏவாள் இவருக்கு முதல் படம்.

இரண்டாவது நாயகி கௌரி சர்மா. தொலைக்காட்சி தொடர்கள், இந்தியில் சில படங்களில் தலைகாட்டியவர். ஏவாள்தான் இவருக்கும் முதல் தமிழ்ப் படம். அடுத்து மதுமிதா. இவர் மாடலிங் செய்கிறவர். ஏவாள் அவரது முதல் தமிழ்ப் படம். நான்காவது அக்ஷரா ராஜ். இவர் மலையாளத்தில் நடித்துள்ளார். ஐந்தாவது பர்சிதா சின்கா. இவர் இரு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். ஏவாள் மூன்றாவது படம்.



Also read... நான் முட்டாள்தனம் பண்ணிட்டேன் - வனிதா விஜயகுமார்

நாயகன் மகேஷின் காதலியை யாரோ கொன்றுவிடுகிறார்கள். பிறகுதான் அவருக்கு கொலை செய்தது ஒரு சைக்கோ என தெரிகிறது. அவனைத் தேடிச் செல்லும் பயணத்தில் பில்லி, சூன்யம் போன்ற அமானுஷ்ய விஷயங்களையும் அவர் எதிர்கொள்ள வேண்டி வருகிறது. சைக்கோ கில்லர், அமானுஷ்யம் என கலந்துகட்டி ஏவாளை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஜித்தேஷ் கருணாகரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை புதுச்சேரி, மற்றும் கேரளா பகுதிகளில் நடத்தியுள்ளனர். விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி