தடம் இந்தி ரீமேக் - நாயகன், நாயகி யார் தெரியுமா?

தடம்

தென்னிந்திய மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்வது சமீபமாக அதிகரித்துள்ளது.

 • Share this:
  இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான படம் தடம். இரட்டை சகோதராகள் கதையில் அருமையான க்ரைம் த்ரில்லரை எடுத்திருந்தார்.

  அருண் விஜய்யின் நடிப்பு படத்துக்கு பக்கபலமாக அமைந்தது. தடம் படத்தை இந்தியில் டப் செய்து யூடியூபில் பதிவேற்றியுள்ளனர். பல கோடிபேர் இதுவரை படத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

  தடத்தை இந்தியில் பூஷன் குமாரும், முரத் கேதானியும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தில் அருண் விஜய் வேடத்தில் நடிக்க ஆதித்ய ராய் கபூரை ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்தனர். தற்போது நாயகியாக நடிக்க மிருணாள் தாக்கரை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தை வர்தன் கேட்கர் இயக்குகிறார். இது அவருக்கு முதல் படம்.

  தென்னிந்திய மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்வது சமீபமாக அதிகரித்துள்ளது. தமிழில் வெளியான மாநகரம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது. இப்போது தடம். இதையடுத்து ராட்சசன், அந்நியன் உள்பட ஒரு டஜன் தமிழ் படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளன.

  Aditya Roy Kapur and Mrunal Thakur in Thadam Hindi remake, aditya roy kapur, aditya roy kapur wife, aditya roy kapur movies, aditya roy kapur thadam remake, thadam hindi remake, thadam hindi remake aditya roy kapur, தடம் இந்தி ரீமேக், ஆதித்ய ராய் கபூர், தடம் இந்தி ரீமேக்
  ஆதித்யா ராய் கபூர் - மிருணாள் தாகூர்


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தடத்தின் இந்தி ரீமேக்குக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அக்டோபரில் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: