தடம் ரீமேக்கில் நடிப்பது இரட்டை சவால் - ஆதித்ய ராய் கபூர்!

ஆதித்ய ராய் கபூர்

தடம் இந்தி ரீமேக் குறித்து நேற்று பூஷன் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். படத்தின் பெயர் மற்றும் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த தடம் திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது. இதில் அருண் விஜய் வேடத்தில் நடிக்கும் ஆதித்ய ராய் கபூர், தடத்தில் நடிப்பது இரட்டை சவால் என கூறியுள்ளார்.

தடம் வெளியான போதே, அதன் இந்தி ரீமேக் குறித்து பேசப்பட்டது. எந்த மொழி ரசிகர்களையும் கவரக்கூடிய கதையும், திரைக்கதையும் கொண்டது தடம். இறுதியில் டி சீரிஸ் பூஷன் குமாரும், முராட் கீதனியும் தடத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றினர். அருண் விஜய் வேடத்தில் நடிக்க ஆதித்ய ராய் கபூரை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தை இயக்குவது அறிமுக இயக்குனர் வர்தன் கேட்கர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தடம் ரீமேக் குறித்து பேசிய ஆதித்ய ராய் கபூர், தடத்தைப் பார்த்ததும் அதன் கதை, திரைக்கதையில் மனதை பறி கொடுத்ததாகவும், இரட்டை வேடத்தில் நடிப்பது இரட்டை சவால் எனவும் கூறியுள்ளார். ஆதித்ய ராய் கபூர் இதுவரை இரண்டு வேடங்களில் நடித்ததில்லை. தடம் ரீமேக்கே அவரது முதல் இரட்டை வேடப் படம் என்பதும் அவரது உற்சாகத்துக்கு முக்கிய காரணம்

Also read... விஜய்யின் பீஸ்டுக்கு போட்டியாக வெளியாகும் பிரபாஸின் ராதே ஷ்யாம்!

தடம் இந்தி ரீமேக் குறித்து நேற்று பூஷன் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். படத்தின் பெயர் மற்றும் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: