Thadam Hindi Remake: தடம் இந்தி ரீமேக்கில் ஆதித்யா ராய் கபூர்!

ஆதித்யா ராய் கபூர்

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 2019-ம் ஆண்டு தமிழில் வெளியான தடம், இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் ஆதித்ய ராய் கபூர் நடிக்கிறார்.

  • Share this:
    இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 2019-ம் ஆண்டு தமிழில் வெளியான தடம், இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் ஆதித்ய ராய் கபூர் நடிக்கிறார்.

    தடம் படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மர்டர் மிஸ்டரியான தடத்தை தனது திரைக்கதையால் மகிழ்திருமேனி மெருகூட்டி, இறுதிவரை ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்தார். இதையடுத்து பூஷன் குமார் தடத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியிருந்தார். சித்தார்த் மல்கோத்ரா இதில் நடிப்பதாக இருந்தது.

    ஆனால், திடீரென சித்தார்த் மல்கோத்ரா படத்திலிருந்து விலக, ஆதித்ய ராய் கபூரை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்களை சித்தார்த் செய்ததாகவும், அது கதைக்கு பொருந்தாமல் இருந்ததாகவும், அதன் காரணமாகவே சித்தார்த் விலகியதாகவும் கூறப்படுகிறது.

    ஆதித்ய ராய் கபூர் இதுவரை இரட்டை வேடங்களில் நடித்ததில்லை. மேலும், படத்தின் கதை அவருக்கு பிடித்துப்போக உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சித்தார்த்துடன் நடிகை மிருணாள் தாக்கூரையும் ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர் இந்தப் படத்தில் நீடிப்பார் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. அறிமுக இயக்குநர் வர்த்தன் கேட்கர் இந்த ரீமேக்கை இயக்குகிறார்.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: