முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Ponniyin Selvan: பெருவுடையாரின் ஆசி பெற தஞ்சைக்கு வரும் கரிகாலன்... மற்றவர்களுக்கும் அழைப்பு!

Ponniyin Selvan: பெருவுடையாரின் ஆசி பெற தஞ்சைக்கு வரும் கரிகாலன்... மற்றவர்களுக்கும் அழைப்பு!

ஆதித்த கரிகாலன் விக்ரம்

ஆதித்த கரிகாலன் விக்ரம்

எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?

  • Last Updated :
  • Tamil Nadu, India

தஞ்சைக்கு தான் வருவதாகவும், குந்தவை, வந்தியத்தேவன், அருண்மொழியை உடன் வருகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பியிருக்கும் ஆதித்த கரிகாலன் விக்ரமின் ட்வீட் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

குறிப்பாக ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்தின் பாடல்களும், ட்ரைலரில் ரஹ்மானின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால் அதை பெரிய திரையில் பார்க்க காத்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இதையடுத்து படத்தின் புரொமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும்... ரவீந்தருக்கு மகாலட்சுமியின் ரொமாண்டிக் போஸ்ட்!

இந்நிலையில் ட்விட்டரில், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என பதிவிட்டிருக்கும் விக்ரம், அந்த பதிவில் கார்த்தி, த்ரிஷா மற்றும் ஜெயம் ரவியை டேக் செய்துள்ளார்.

கவனம் பெறும் பொன்னியின் செல்வன் பட்டு புடவைகள்!

top videos

    அதற்கு அவர்கள் மூன்று பேரின் பதில் என்னவாக இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறது ட்விட்டர் உலகம்.

    First published:

    Tags: Actor Jayam Ravi, Actor Karthi, Actor Vikram, Actress Trisha, Ponniyin selvan