Home /News /entertainment /

’கனவு நனவாகியது...’ அதிதி ஷங்கர் பெருமிதம்!

’கனவு நனவாகியது...’ அதிதி ஷங்கர் பெருமிதம்!

அதிதி ஷங்கர்

அதிதி ஷங்கர்

இந்தத் திரைப்படம் எனது கனவை நனவாக்கியது. விருமன் குழுவை மிகவும் மிஸ் செய்யப் போகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார் அதிதி.

    தனது கனவு நிறைவேறியதாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியிருக்கும் அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படுபவர் ஷங்கர். இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகரிடம் உதவி இயக்குநராக இருந்த ஷங்கர் ஜெண்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநரானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் பெற்றதையடுத்து, ஷங்கர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. தொடர்ந்து அவர் இயக்கிய அத்தனை படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன.

    இந்நிலையில் ஷங்கரின் இளையமகள் அதிதி சினிமாவில் அறிமுகமாவதாக தகவல் வெளியானது. கடந்த செப்டம்பர் மாதம் இது உறுதி செய்யப்பட்டது. முத்தையாவின் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் அதிதி. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில், கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார்.



    மேலும் படிக்க - சிம்புவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்?

    தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிதி, ’விருமன் நிறைவடைந்துள்ளது. இந்தத் திரைப்படம் எனது கனவை நனவாக்கியது. விருமன் குழுவை மிகவும் மிஸ் செய்யப் போகிறேன். நீங்கள் அனைவரும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி