தலைவரை சந்தித்தேன் - பூரிப்பில் அதிதி ஷங்கர்!

ரஜினிகாந்துடன் அதிதி சங்கர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரஜினியை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார் அதிதி.

 • Share this:
  ஷங்கரின் மகள் அதிதி விநாயகர் சதுர்த்தி அன்று ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

  இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் அறிமுகமாகிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரிக்கிறது.

  இந்த அறிவிப்பு வந்த சில தினங்களில் ஹைதராபாத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழா நடந்தது. இதில் கலந்து கொண்ட அதிதி , இயக்குனர் ராஜமௌலி, நடிகர் ரன்வீர் சிங் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அதனை தனது சமூக வலைதளத்திலும் பகிர்ந்திருந்தார்.

  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரஜினியை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார் அதிதி. விநாயகர் சதுர்த்திக்கு தலைவரை சந்திதேன், ஆசி பெற்றுக்கொண்டேன் என அவருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் அதிதி பகிர்ந்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Aditi Shankar meets Rajinikanth on Vinayagar Chathurthi, aditi shankar, aditi shankar movie, aditi shankar linkedin, aditi shankar education, aditi shankar director shankar daughter, aditi shankar photo, aditi shankar husband, aditi shankar age, அதிதி சங்கர், அதிதி சங்கர் திரைப்படம், அதிதி சங்கர் ரஜினிகாந்த், அதிதி சங்கர் வயது,
  அதிதி சங்கர்


  தனது மகள்கள் நடிப்பதை விரும்பாதவர் ரஜினி. திரைக்குப் பின்னால் மட்டுமே அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். ஷங்கருக்கும் தனது மகளை நடிக்க வைப்பதில் விருப்பமில்லை. ஆனால், மகளின் வற்புறுத்தல் காரணமாகவே சம்மதித்துள்ளார் என ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் உலவுகிறது.
  Published by:Shalini C
  First published: