மாடர்ன் உடையில் தந்தையின் பட பூஜையில் கலந்துகொண்ட அதிதி...!

ஷங்கர், அதிதி மற்றும் ராஜமௌலி

ஷங்கரின் இந்த புதிய படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, ரகுமான், ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நேற்று ஷங்கரின் புதுப்பட பூஜையும், தொடக்கவிழாவும் ஹைதராபாத்தில் நடந்தது. ராஜமௌலி, சிரஞ்சீவி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். மதுரை தொகுதியின் எம்பி சு.வெங்கடேசனும் கலந்து கொண்டது பல்வேறு யூகங்களை கிளப்பியது. தந்தையின் புதுப்பட பூஜையில் அவரது மகள் அதிதியும் கலந்து கொண்டார்.

அதிதி முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு சில தினங்கள் முன்பு வெளியானது. அதிதி பாவாடை தாவணியில் இருக்கும் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

பாரம்பரிய உடையில் பார்த்த அதிதியை, ஷங்கர் படவிழாவில் மாடர்ன் உடையில் பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். கிராமத்து வேடம் மட்டுமில்லை, நகரத்து மாடர்ன் பெண் வேடத்துக்கும் நான் தயார் என்று சொல்வது போலிருந்தது அவரது உடை.

ஷங்கரின் இந்த புதிய படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, ரகுமான், ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். தமன் இசையமைக்க, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.Also read... ஷங்கர் பட விழாவில் கலந்து கொண்ட மதுரை எம்பி சு.வெங்கடேசன்...!

ஷங்கர் மற்றும் ராஜமௌலியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட, அதிதி, தனக்கு மிகப்பிடித்தமான இரு இயக்குனர்களுடன் இருப்பது பெருமையளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
Published by:Vinothini Aandisamy
First published: