Home /News /entertainment /

தேங்க்யூ ஷங்கர் சார்... அதிதி ஷங்கர் உருக்கமான பதிவு!

தேங்க்யூ ஷங்கர் சார்... அதிதி ஷங்கர் உருக்கமான பதிவு!

ஷங்கர் - அதிதி ஷங்கர்

ஷங்கர் - அதிதி ஷங்கர்

ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தனது அப்பாவுக்கு உருக்கமான பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தேங்க்யூ ஷங்கர் சார் என உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார் அவரது மகள் அதிதி ஷங்கர். 

    ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என தொடர் வெற்றித் திரைப்படங்களை சறுக்காமல் அடுத்தடுத்து படைத்து தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட அடையாளமாக உயர்ந்தார் ஷங்கர். ஒவ்வொரு திரைப்படத்திலும் திரைக்கதையை தாண்டி, தொழில்நுட்பத்திற்கு மேற்கொண்ட முயற்சிகள் பார்க்கும் ரசிகனை ஒவ்வொரு பிரேமிலும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தது.



    இயக்குநர்களின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஷங்கர் உருவாக்கிய சிவாஜி திரைப்படம் வசூலில் புதிய எல்லைகளை தொட்டு தமிழ் சினிமாவின் வர்த்தக எல்லையின் வீச்சு என்ன என்பதை உலகிற்கு உணர்த்தியது. ஷங்கரின் கனவு திரைப்படமான எந்திரனில் ரஜினியை ரோபோவாக மாற்றி திரையரங்குகளில் ரஜினி ரசிகர்களுக்கு பிரம்மாண்ட விருந்து படைத்தார். இதையடுத்து ஷங்கர் - ரஜினி கூட்டணியில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 வெளியாகி உலகளவில் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2, ராம் சரணின் 15-வது படம் ஆகியவற்றை இயக்கி வருகிறார். இதற்கிடையே இன்று ஷங்கர் தனது 59-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    லைக்ஸை குவிக்கும் காஜல் அகர்வாலின் குடும்பப் படம்!



    இந்நிலையில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தனது அப்பாவுக்கு உருக்கமான பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில், “என் வாழ்வில் சினிமாவைக் கொண்டுவந்த மனிதருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பான்-இந்திய படங்களின் முன்னோடி, நீங்கள் திரையில் கற்பனையை உயிர்ப்பிக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி ஷங்கர் சார். ஆனால் எப்போதும் என்னுடன் இருப்பதற்கு முதலில் நன்றி அப்பா. லவ் யூ... சின்னு” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Director Shankar

    அடுத்த செய்தி