ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'ரூமுக்கு வாங்க'! ஆதி புருஷ் இயக்குனர் மீது கோபப்பட்டாரா பிரபாஸ்? வைரலாகும் வீடியோ!

'ரூமுக்கு வாங்க'! ஆதி புருஷ் இயக்குனர் மீது கோபப்பட்டாரா பிரபாஸ்? வைரலாகும் வீடியோ!

ஆதி புருஷ்

ஆதி புருஷ்

இயக்குனர் ஓம் ராவத்தை ரூமுக்கு வாங்க என அழைக்கும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆதி புருஷ் இயக்குனர் மீது கோபப்பட்டாரா பிரபாஸ்? ட்விட்டரில் வெளியான வீடியோவை வைத்து கலாய்க்கும் ரசிகர்கள். 

  பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கி இருக்கும் திரைப்படம் ஆதி புருஷ். பான் இந்தியா படமாக வெளிவரவுள்ள  இந்த படத்திற்கு பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பாகுபாலி வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான 2 படங்களும் படு தோல்வியில் முடிந்தன. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் ஆதி புருஷ் படத்தை பெரிதும் நம்பி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இந்த படத்தின் டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த டீசர் குறித்து  இணையத்தில் ஏகப்பட்ட ட்ரோல்ஸ், மீம்ஸ்களும் குவிக்கின்றன.

  இணையத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கும் ஆதிபுருஷ் டீசர்.. மீம் மெடிரியலாக மாறிய படத்தின் டீசர்

  ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை க்ரித்தி சனோன், பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடி என ஒருபக்கம் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்க டீசரில் இடம்பெற்றுள்ள ஸ்பெஷல் எஃபெக்ட், கிராபிக்ஸ் காட்சிகள் கார்டூன் படம் போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே போல் வில்லன் ராவணனின் தோற்றமும் குழந்தைகளுக்கான கிராபிக்ஸ் படம் போல் இருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

  இந்நிலையில் சோஷியல் மீடியாக்களில் ஆதி புருஷ் படத்தை கலாய்த்து வெளியாகி இருக்கும் மீம்ஸ்கள் ஒருபக்கம் இருக்கையில் நடிகர், பிரபாஸ் இயக்குனர் ஓம் ராவத்தை ரூமுக்கு வாங்க என அழைக்கும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பாதுகாவலர்களுடன் நடந்து செல்லும் பிரபாஸ் , திடீரென்று திரும்பி இயக்குனர் ஓம் ராவத்தை ரூமுக்கு வாருங்கள் என அழைக்கிறார்.

  டீசரை பார்த்த பிரபாஸ் ரியாக்‌ஷன் தான் இந்த ரூமுக்கு வாங்க வீடியோ என ரசிகர்கள் கிளப்பி விட்டுள்ளனர். பிரபாஸ் கோபத்தில் ஓம் ராவத்தை அழைப்பதாகவும் உள்ளே  சென்ற பின்பு வேற மாதிரியான சம்பவங்கள் நடக்க போவதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இவை முழுக்க முழுக்க ரசிப்பதற்கு மட்டுமே என ரசிகர்கள் குறிப்பிடவும் தவறவில்லை.

  அந்த வீடியோவில் பிரபாஸ், இயக்குனரை ரூமூக்கு அழைப்பது உண்மை தான்.  என்ன காரணம் என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Actor prabhas, Tollywood, Viral