அட்வெஞ்சர் த்ரில்லர்... அமலாபாலின் ‘அதோ அந்த பறவை போல’ டீசர்!

  • News18
  • Last Updated: November 13, 2019, 8:17 PM IST
  • Share this:
அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல படத்தின் டீசரை நடிகர் மோகன்லால் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து தனது துணிச்சலான நடிப்பை வெளிபடுத்தியிருந்த அமலாபால் அடுத்து அட்வெஞ்சர் த்ரில்லர் ஜானரில் உருவான அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஆர்.வினோத் இயக்கியுள்ளார். அருண் ராஜ கோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கேரளா மற்றும் தமிழ்நாடு வனப்பகுதிகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ளார்.


விரைவில் திரைக்கு வர இருக்கும் படத்தின் டீசரை நடிகர் மோகன்லால் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அதில் வசனங்கள் எதுவுமின்றி நடிகை அமலாபாலின் அதிரடியான சண்டைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

First published: November 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்