• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் விஷால்...!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் விஷால்...!

விஷால் ம்ற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்

விஷால் ம்ற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை எடுத்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
விஷால் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் சக்ரா. ஆக்ஷன் படமான இது வந்தது தெரியாமால் சத்தமின்றி வெளியேறியது. அதற்கு முந்தையப் படங்களான ஆக்ஷன், அயோக்யாவும் அப்படியே. தீபாவளிக்கு வெளியாகும் எனிமி படத்தை மலைபோல் நம்பியிருக்கிறார். அது கை கொடுக்குமா காலை வாருமா என்பது தீபாவளி அன்று தெரியும்.

தற்போது வீரமே வாகை சூடும், லத்தி ஆகிய படங்களில் விஷால் நடித்து வருகிறார். இதில் வீரமே வாகை சூடும் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தாவும், ரமணாவும் இணைந்து தயாரிக்கின்றனர்

இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கயிருப்பதாக விஷால் கூறியுள்ளார். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை எடுத்தார். மூன்று வேடங்கள், இரண்டு பாகங்கள் என்று சிம்புவை வைத்து அகலக்கால் வைத்ததில் ஆதிக் தொடங்கி தயாரிப்பாளர்வரை அனைவருக்கும் கடும் சேதாரம். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அன்பானவன் ஏற்படுத்திய பதினெட்டு கோடி கடனைக் கேட்டு இப்போதும் பஞ்சாயத்து நடத்துகிறார்

Also read... ஜெய் பீம் படத்தால் விக்ரம் பிரபுவின் டாணாக்காரனுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

ஆதிக் ரவிச்சந்திரன் அந்த கோர விபத்திலிருந்து குணமாகி தற்போது பகீரா என்ற படத்தை பிரபுதேவாவை வைத்து முடித்துள்ளார். அடுத்து அவர் விஷாலை இயக்குகிறார்

இந்தப் படங்கள் தவிர மிஷ்கின் தொடங்கி வைத்த துப்பறிவாளன் 2 படம் பாதியில் நிற்கிறது. இதனை ஜனவரியில் தொடங்க விஷால் திட்டமிட்டுள்ளார். படத்தை அவரே இயக்குகிறார். விஷால் முதலில் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்து செல்லமே மூலம் நடிகரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: