Home /News /entertainment /

விஷாலின் முதல் பான் இந்தியா திரைப்படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்

விஷாலின் முதல் பான் இந்தியா திரைப்படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்

விஷால்

விஷால்

விஷால் 33 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் வினோத் குமார் தயாரிக்கிறார்.

முன்னணி நடிகர்களின் படங்கள் பான் - இந்தியா திரைப்படங்களாக வெளியாகின்றன. தென்னிந்திய மொழிகளுடன் இந்தி மொழியிலும் வெளியாகும் இந்த பான் இந்தியா திரைப்படங்களால் வசூல் அதிகரிக்கும் என்பது எதிர்பார்ப்பு.

இன்று வெளியாகியிருக்கும் புஷ்பா, ஜனவரியில் வெளியாகவிருக்கும் ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் என தெலுங்கு சினிமாக்கள் எப்போதோ பான் இந்தியாவுக்கு மாறிவிட்டன. தமிழில் தான் அது சாத்தியமாகாமல் இருந்தது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தனது எதற்கும் துணிந்தவன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் என அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து விஷால் தனது 33-வது படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாவதாக அறிவித்துள்ளார். விஷால் நடிப்பில் வீரமே வாகை சூடும், லத்தி படங்கள் தயாராகி வருகின்றன. ஏப்ரலில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கி நடிக்கிறார். அதற்கு முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தத் தகவலை பல வாரங்கள் முன்பே நாம் தெரிவித்திருந்தோம். அதனை இப்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

அனிருத் குரலில் சிவகார்த்திகேயனின் டான் முதல் சிங்கிள் வெளியீடு!

விஷால் 33 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் வினோத் குமார் தயாரிக்கிறார். இவர் விஷாலின் முந்தையப் படம் எனிமியை தயாரித்தவர். படத்தின் டெஸ்ட் ஷுட் நேற்று முடிவடைந்துள்ளது. 2022 பிப்ரவரி முதல் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor vishal

அடுத்த செய்தி