அதீரா கதாபாத்திரம் தானோஸ் போலவா?... சீக்ரெட் உடைத்த சஞ்சய் தத்

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற அதீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: July 30, 2019, 1:44 PM IST
அதீரா கதாபாத்திரம் தானோஸ் போலவா?... சீக்ரெட் உடைத்த சஞ்சய் தத்
கேஜிஎஃப் 2
Web Desk | news18
Updated: July 30, 2019, 1:44 PM IST
கே.ஜி.எஃப் படத்தில் அதீரா கதாபாத்திரம் அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் தானோஸ் போல் இருக்கும் என்று நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார்.

கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எஃப் திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

இந்தப் படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நான்கு நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. கன்னட சினிமாவில் முதல் 100 கோடி வசூல் என்று அசத்தி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.


தற்போது கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. இந்நிலையில், கே.ஜி.எஃப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற அதீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என்று படக்குழு அறிவித்துள்ளது.Loading...

இது குறித்து நடிகை சஞ்சய் தத், ‘அதீராவின் கதாபாத்திரம் மிகவும் பயங்கரமானது. நீங்கள் அவெஞ்சர்ஸ் படம் பார்த்திருந்தால் உங்களுக்கு தானோஸை பற்றி தெரிந்திருக்கும். அதீரா கதாபாத்திரமும் அதுபோல தான். அதிரா என்பவன் மிகவும் ஆபத்தானவன். இதுபோல ஒரு கதாபாத்திரத்துற்காகத்தான் நான் காத்திருந்தேன்’ என்று கூறியுள்ளார்.

Also watch

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...