Yashika Aannand: ’துபாயில் ஸ்கை டைவிங்’.. விமானத்திலிருந்து அசால்ட்டாக குதித்த யாஷிகா! வைரலாகும் வீடியோ

Yashika Aannand: ’துபாயில் ஸ்கை டைவிங்’.. விமானத்திலிருந்து அசால்ட்டாக குதித்த யாஷிகா! வைரலாகும் வீடியோ

யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் துபாயில் ஸ்கை டைவிங் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்களிடையே பிரபலமானார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம் சல்ஃபர் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.  ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் மனதை தொட்டவர் என்று கூறலாம். படப்பிடிப்புகளில் பிசியாக இருந்த யாஷிகா தற்போது துபாய் சென்றுள்ளார்.

இந்நிலையில் துபாயில் தான் ஸ்கை டைவிங் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ’திஸ் இஸ் கிரேசி.. நான் செய்ய நினைத்ததில் இதுவும் ஒன்று’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 


 

மேலும் இந்த வீடியோவை பார்த்த யாஷிகாவின் ரசிகர்கள், உங்களுக்கு பயமாக இல்லையா, தலைவி, நீங்கள் எப்போதும் தைரியமான அழகான பெண் என பல கமெண்ட்களை கூறி வருகின்றனர்.
Published by:Tamilmalar Natarajan
First published: