நடிகை யாஷிகா ஆனந்துக்கு எலும்பு முறிவு... ஆண் நண்பர்கள் நிலை என்ன? குடித்துவிட்டு கார் ஓட்டினாரா?

யாஷிகா ஆனந்த்

விபத்தில் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 • Share this:
  சாலை விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

  தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை மேலும் பிரபலமடைய வைத்தது. யாஷிகா ஆனந்ந் தனது தோழி வள்ளிஷெட்டி பவானி மற்றும் நண்பர்களான சையது , ஆமீர் ஆகியோருடன் தனக்கு சொந்தமான டாடா ஹேரியர் காரில் சனிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

  Also Read: லிவ் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்வீட்டி படேல் வழக்கில் அவிழ்ந்த மர்ம முடிச்சுகள்.. கையும் களவுமாக சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

  டாடா ஹேரியர் காரை யாஷிகா ஆனந்த் ஓட்டியுள்ளார். அவருக்கு அருகில் வள்ளி ஷெட்டி பவானி அமர்ந்துள்ளார். சையது, ஆமீர் இருவரும் பின்பக்க சீட்டில் அமர்ந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் ஈசிஆர் சாலையில் காரை அதிவேகமாக இயக்கியுள்ளார். இரவு 11.45 மணியளவில் கார் சூலேறிக்காடு பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது சாலையில் வேகத்தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேரிக்கேடில் மோதியுள்ளது . இதில் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்தது. பேரிக்கேடில் மோதிய வேகத்தில் கார் வலது பக்கத்தில் இருந்த செண்ட்டர் மீடியனில் மோதி தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதில் கார் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். காரை ஓட்டிவந்த யாஷிகா ஆனந்த் காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின் இறுக்கையில் அமர்ந்திருந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பவானியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாஷிகா ஆனந்த் சுயநினைவோடு இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

  மோசமாக கார் ஓட்டி, உயிரிழப்பு ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். அதிவேகமாக கார் ஓட்டியது, விபத்துக்குள்ளாக்கியது, உயிரிழப்பு ஏற்படுத்தியது 279, 337, 304 என மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியிருக்கலாம் என்கிற சந்தேகங்கள் எழுந்த நிலையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: