• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வாக்கிங் ஸ்டிக்குடன்.. விபத்துக்கு பிறகு யாஷிகா கலந்துக்கொண்ட முதல் நிகழ்ச்சி ..

வாக்கிங் ஸ்டிக்குடன்.. விபத்துக்கு பிறகு யாஷிகா கலந்துக்கொண்ட முதல் நிகழ்ச்சி ..

யாஷிகா

யாஷிகா

Yashika Aannand First Public Appearance : நடிகை யாஷிகா விபத்திற்கு பிறகு முதன்முறையாக கடைத்திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார்.

  • Share this:
    நடிகை யாஷிகா ஆனந்த் 2017 ஆம் ஆண்டு வெளியான் ‘இருட்டு அறையில்  முரட்டு குத்து’ என்ற படம் மூலம் பிரபலமானார். அதையடுத்து கழுகு 2, ஜாம்பி ஆகிய படங்களில் நடித்தார்.பின்பு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் யாஷிகாவிற்கு ரசிகர் கூட்டம் அதிகரித்தது.

    அதன் பின்பு திரைப்பட வாய்ப்புகளும் குவிந்தன. இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று சென்னைக்கு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கினார். விபத்தில் யாஷிகாவின் பெண் தோழி ஒருவர் இறந்துவிட்டார். விபத்துக்கு பிறகு நான்கு மாதங்கள் சிகிச்சையில் இருந்த யாஷிகா தற்போது முழுமையாக குணமாகி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார்.



    ஆம்.நான்கு மாதங்களுக்கு பிறகு கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு வாக்கிங் ஸ்டிக்கை பிடித்தப்படி வந்துள்ளார்.



    யாஷிகாவின் கம் பேக்கிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் பின்பு யாஷிகா திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் யாஷிகா தனது இன்ஸ்டகிராமில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அதில் ‘என்னைச் சுற்றியிருந்த நெருப்பை விட எனக்குள் இருந்த நெருப்பு பிரகாசமாக எரிந்ததால் நான் உயிர் பிழைத்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த பிரபலங்கள் யாஷிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

     




    விபத்திற்கு பிறகு யாஷிகா கலந்துக்கொண்ட முதல் நிகழ்ச்சி இதுவே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: