அதிமுக, பாஜக நிர்வாகிகள் தன்னை மிரட்டுவதாக நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு

அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக, பாஜக நிர்வாகிகள் தன்னை மிரட்டுவதாக நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு
நடிகை விஜயலட்சுமி
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 6:13 PM IST
  • Share this:
சென்னை திருவான்மியூரில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை விஜயலட்சுமி, பாஜகவைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகளும் அதிமுகவைச் சேர்ந்த ஒருவரும் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், ஆபாசமான வார்த்தைகளால் தன்னை விமர்சனம் செய்வதாகவும் தெரிவித்தார். காவல்துறையினரிடம் மிரட்டல் விடுத்தவர்கள் மீது ஆடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைக்க இருப்பதாகவும், இதனால் தனக்கு பாஜக சார்பில் தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது தன்னுடைய செல்போனை பாஜகவின் கலாச்சாரப் பிரிவு மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராமன் எடுத்துச் செல்ல முயற்சித்தார் எனவும் விஜயலட்சுமி தெரிவித்தார். ஜூலை மாதம் நடைபெற்ற இச்சம்பவத்திற்காக தற்போது தொடர்ச்சியாக தனக்கு பாஜக நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

Also read: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்


பாஜக மாநிலத் தலைமையும் அதிமுக தலைமையும் இதுபோன்று மிரட்டல் விடுபவர்களைக் கண்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், விரைவில் தனக்கு பாதுகாப்பளிக்கும் கட்சியில் இணைந்து அவர்கள் வெற்றிபெற பாடுபடுவேன் என்றார். பாஜகவில் இணைவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சீமான் பாஜகவோடு கூட்டணி வைப்பார் என்ற தகவல் அறிந்ததும் அந்த நிலைப்பாட்டை மாற்றி விட்டதாகவும் விஜயலட்சுமி தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் மீது மரியாதை உள்ளது எனவும் விரைவில் தனக்குப் பாதுகாப்பு கொடுக்கும் கட்சியை நான் தேர்ந்தெடுப்பேன் எனவும் கட்சிக்காக பிரசாரத்தில் ஈடுபடுவேன் எனவும் அவர் கூறினார்.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading