நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது-
அனைவருக்கும் குட்மார்னிங். எனக்கு இன்று நல்ல குட் மார்னிங்காக அமையவில்லை. எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்க் அணிதல் உள்பட அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டேன். இருப்பினும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டது.
தொழிலதிபருக்கு மனைவியாக இருக்க மாதம் ரூ. 25 லட்சம்… விஷால் பட நடிகையின் பேட்டியால் பரபரப்பு
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும். கொரோனா நம்மை விட்டு இன்னும் அகலவில்லை. எல்லோரும் மாஸ்க் அணியுங்கள். உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தி நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேபோன்று சினிமா பிரபலங்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. முறையான தடுப்பு நடடிவக்கைகளை மேற்கொள்ளுமாறு திரை பிரபலங்கள் தங்களது ரசிகர்களை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆமிர் கானின் 'லால் சிங் சத்தா' படத்தை வெளியிடும் உதயநிதி, சிரஞ்சீவி…
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னையில் பொதுமக்களுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு ரூ. 500 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.