Udhayanidhi Stalin: உதயநிதியிடம் 2 டன் உணவுப் பொருட்களை வழங்கிய வரலட்சுமி!

உதயநிதியுடன் வரலட்சுமி

’சேவ் சக்தி ஃபவுண்டேஷன்’ நிறுவனர் வரலட்சுமி சரத்குமாரும், இணை நிறுவனர் சாயாவும் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.

  • Share this:
    ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு 2 டன் உணவுப்பொருட்களை அரசுக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

    இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. அதோடு தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்கு நிதி தேவை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் நன்கொடை அளித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இந்நிலையில் ’சேவ் சக்தி ஃபவுண்டேஷன்’ நிறுவனர் வரலட்சுமி சரத்குமாரும், இணை நிறுவனர் சாயாவும் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்கள். இதற்காக திருவல்லிகேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலினை சந்தித்த வரலட்சுமி, ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டுவருவதன் விவரங்களை அளித்தார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''Save Shakti - Sankalp Beautiful World - Pedigree India' சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு இரண்டு டன் உணவு வழங்கபட்டு வருகிறது. இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டு சேர்க்க அதன் விவரத்தை சேவ் சக்தி அறக்கட்டளை நிறுவனர் நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு நன்றி. வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.



    இதையடுத்து ட்விட்டரில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவரது பதிவில், “எங்களின் சேவ் சக்தி அமைப்பினரை சந்தித்து, கோவிட் ஹெல்ப்லைனை துவங்கி வைத்து, தெரு நாய்களுக்கு நாங்கள் அளித்த 2 டன் உணவை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி உதயநிதி ஸ்டாலின். தயவு செய்து எங்களின் கோவிட் ஹெல்ப்லைனை பயன்படுத்துங்கள். எங்களால் முடிந்த உதவியை செய்வோம்” என தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: