வனிதா விஜயகுமாரை சினிமா நடிகையாக அறிந்தவர்களைவிட சினிமாவுக்கு வெளியே அவர் போட்ட சண்டைகளால் அறிந்தவர்கள் அதிகம். கான்ட்ரவர்ஸியால் லைம் லைட்டில் இருந்து கொண்டிருக்கும் வனிதா இந்த வருடம் சினிமாவிலும் சின்சியராக நடிக்க ஆரம்பித்துள்ளார்.
பவர் ஸ்டாருடன் ஒரு படத்தில் நாயகியாக வனிதா நடித்து வந்தார். பவர் ஸ்டாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சமீபத்தில் தில்லு இருந்தா போராடு படத்தில் வில்லியாக நடித்தார். பஞ்சாயத்து பரமேஸ்வரி என்ற அந்த கதாபாத்திரம் தனக்கு பேர் வாங்கித் தரும் என வனிதா நம்புகிறார்.
அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசியவர், சினிமாவில் எனக்குக் கிடைத்த இடத்தை கோட்டைவிட்டு விட்டேன். முட்டாள்தனம் பண்ணிவிட்டேன். இதை தாமதமாகதான் உணர்ந்தேன். இனிமேல் விட்ட இடத்தைப் பிடிக்கப் போகிறேன் என்றார். தில்லு இருந்தா போராடு படத்தில் நடித்துள்ள பஞ்சாயத்து பரமேஸ்வரி கதாபாத்திரத்துக்காக வனிதா பைக் ஓட்ட கற்றுக் கொண்டுள்ளார். இது உலகமகா வில்லியாக இருக்கும். இனிமேல் தொடர்ந்து வில்லியாக நடிப்பேன் என்றார் அவர்.
சினிமாவை ஒரு கை பார்ப்பேன் என்று அவர் சொன்னது சும்மாயில்லை. வில்லி வேடம் வரும்வரை சும்மா இருப்பானேன் என்று காத்து என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளார். சினிமாவில் குணச்சித்திரமோ, காமெடியோ, வில்லியோ இல்லை ஒரு பாடலுக்கு நடனமோ... வனிதா அனைத்துக்கும் தயார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.