• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இரு தரப்பிலும் பரபரப்பு புகார் - காவல் நிலையத்தில் நடிகை வனிதாவிடம் விசாரணை

இரு தரப்பிலும் பரபரப்பு புகார் - காவல் நிலையத்தில் நடிகை வனிதாவிடம் விசாரணை

வனிதா விஜய குமார்

வனிதா விஜய குமார்

நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் சூரியா தேவி ஆகிய இருவரும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் என்ற விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை கடந்த மாதம் 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், பீட்டர் பால் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகாரளித்திருந்தார். இதையடுத்து பலரும் இத்திருமணம் குறித்து சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

    இதனை அடுத்து, சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர் காவல் நிலையத்தில் இரண்டு முறை வனிதா புகாரளித்திருந்தார். மேலும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வனிதா விஜயகுமார், சூர்யா தேவி, ரவீந்திரன் ஆகியோர் தொடர்ந்து என்னைப் பற்றி அவதூறாக பேசிவருவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

    மேலும் சூர்யா தேவி கஞ்சா விற்பனையை பாதுகாப்பாக நடத்துவதற்காகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரம் ஒன்றையும் வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர் இணையதளத்தில் வெளியிட்டதோடு, காவல்துறையினரிடம் ஆதாரங்களை கொடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

    இதனை அடுத்து, வனிதா விஜயகுமார் தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக சூர்யா தேவி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருக்கிறார்.




    படிக்க: கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா - வாழ்த்தும் ரசிகர்கள்


    படிக்க: BREAKING | தமிழகத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று









    பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தன்னை கஞ்சா வியாபாரி என்றும், அவதூறான வார்த்தைகள் பேசியும் மனதை புண்படுத்தி உள்ளதாகவும் எனவே வனிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    வனிதா விஜயகுமார், சூர்யா தேவி என்பவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும், நடிகை வனிதா விஜயகுமார் மீது சூரியா தேவியால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் இரண்டு தரப்பினரிடமும் வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை.

    நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் சூரியா தேவி ஆகிய இருவரும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar A
    First published: