பூதாகரமான இணையச்சண்டை - வனிதாவின் அடுத்த டார்கெட்?

நடிகை வனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர் குறித்து அவதூறு பரப்பியதாகவும் கூறி யூடியூப்பர் சூர்யா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மீதும் வனிதா புகார் அளித்துள்ளார்.

  • News18
  • Last Updated: July 24, 2020, 6:52 AM IST
  • Share this:
பிரபல நடிகையான வனிதா, தனது யூட்யூப் சேனலில் பணிபுரிந்த பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் மனைவி எலிசபத், தன்னிடம் விவாகரத்து வாங்காமல் திருமணம் செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பிறகு எலிசபத்தும் வனிதாவும் யூடியூப் மூலம் பரஸ்பரம் விளக்கம் கொடுக்கக் தொடங்கி பின்னர் காரசாரமாகி பரஸ்பரம் திட்டிக்கொள்ளத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

எலிசபத்திற்கு ஆதரவாகவும், வனிதாவுக்கு எதிராகவும், வனிதா ஸ்டைலிலேயே யூட்யூப்பில் தன் பெயரில் தனி சேனல் நடத்தி வரும் சூர்யா தேவி கருத்து தெரிவிக்கத் தொடங்கினார். நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் தனிப்பட்ட வகையில் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு வந்தார். வனிதாவும் சூர்யாதேவிக்கு பதிலளிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை வீடியோக்களாக வெளியிட்டார்.


ஆனால் வீடியோக்களில் சூர்யாதேவி தரக்குறைவாக பேசி அவதூறு பரப்புவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் போரூர் காவல்நிலையத்தில் சூர்யா தேவி மீது புகார் ஒன்றை அளித்தார். அவதூறு பரப்புவது, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி புகார் அளித்திருந்தார். மேலும் வடபழனி காவல்நிலையத்தில் நடிகை வனிதா மீது சூர்யா தேவியும் புகார் அளித்தார்.

இரு தரப்பு புகார்களையும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வந்தனர். கடந்த வாரம் நடிகை வனிதாவையும், சூர்யா தேவியையும் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர்.

தனிமனித அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை பதிவிட வேண்டாம் என இருவரிடமும் போலீசார் அறிவுறுத்தினர். மேலும், பிலபலங்கள் மீது அவதூறாக வீடியோ வெளியிட்டு விளம்பரம் தேடி முயற்சிக்கக்கூடாது என சூர்யாதேவிக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.எச்சரிக்கையை மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதா மீது அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். இதனால் பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் சூர்யா தேவி மீது வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.

ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக தமிழிசை இருந்தபோது, அவரை அவதூறாக பேசிய வழக்கை கைதான நிலையில், மீண்டும் சூர்யா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகைகள் கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எதிராக நடிகை வனிதா வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு கருத்துகளை பேசி வருவதாக கூறியுள்ளார்.

கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மீதான வனிதாவின் புகாரை விசாரிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். லைக் வெறிக்கு ஆசைப்பட்டு, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
படிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்

படிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்

படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு

இதனிடையே இரண்டு திருமணம் செய்து கொள்வது தொடர்பாக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குறித்து வனிதா தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவும், பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினரும் வனிதா மீது புகார் அளித்துள்ளனர்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading