என் குடும்பத்துக்கே கொரோனா பாதிப்பு... எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் நடிகை

என் குடும்பத்துக்கே கொரோனா பாதிப்பு... எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் நடிகை

நடிகை வைபவி ஷாண்டில்யா

தானும் தனது குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை வைபவி ஷாண்டில்யா தெரிவித்துள்ளார்.

  • Share this:
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 271 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் 37,028 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 1,20,95,855 ஆக இருக்கிறது. மொத்தம் 1,13,93,021 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,62, 114 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலும் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வரும் தமிழக அரசு மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் நடிகர் சச்சின் டெண்டுல்கர், அமீர் கான், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழில் சந்தானத்துடன் சக்கபோடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வைபவி ஷாண்டில்யா தனக்கும் தனது தாய், தந்தையரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மும்பையில் தான் வசிக்கும் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: