நடிகை உஷாராணி உடல்நலக்குறைவால் மரணம்

பழம்பெரும் நடிகை உஷாராணி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

நடிகை உஷாராணி உடல்நலக்குறைவால் மரணம்
நடிகை உஷாராணி
  • Share this:
கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் உஷராணி. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், பிரேம் நசீர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தென்குமரி, அரங்கேற்றம், புதிய வார்ப்புகள், ஸ்வர்ண கிரீடம், பட்டிகாட்டு பொண்ணையா, சிவந்த கண்கள் உள்ளிட்ட படங்கள் இவருக்கு சினிமா உலகில் பெயர் பெற்று தந்தது. நடிகை உஷாராணி மலையாள சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கிய சங்கரன் நாயரை திருமணம் செய்து கொண்டார். கணவர் 2005-ம் ஆண்டு காலமான நிலையில் சென்னையில் அவரது மகன் விஷ்ணு சங்கருடன் உஷாராணி வசித்து வந்தார்.

இந்நிலையில் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உஷாரணி நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளன
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading