ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரிஷப் பண்ட் இப்படி இருக்கும்போது இதை செய்யலாமா? நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

ரிஷப் பண்ட் இப்படி இருக்கும்போது இதை செய்யலாமா? நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

ரிஷப்

ரிஷப்

ரிஷப் பண்டை குறிவைத்து நடிகை ஊர்வசி ரவுத்தேலா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக வதந்திகள் பரவி வந்தன. இருவரும் சில காலம் டேட்டிங் செய்து வந்ததாக செய்திகள் உலாவிய நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் மோதலுடன் பிரிந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து ட்விட்டரில் ஜாடை வார்த்தைகளில் திட்டி விமர்சித்து பதிவுகளை போட்டு வந்தனர். இந்த சூழலில் தான் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலை விபத்துக்குள்ளானார். டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு டிசம்பர் 30ஆம் தேதி சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது.

படுகாயங்களுடன் ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோகிலா பென் மருத்துவமனையை போட்டோ எடுத்த புகைப்படத்தை ஸ்டோரியாக பதிவுட்டுள்ளார். ரிஷப் பண்ட் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் புகைப்படத்தை இவர் பகிர்ந்துள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: '' காதலை வெளிப்படுத்த பயப்படாதீங்க'' - கிருத்திகா உதயநிதி ட்வீட்

ஊர்வசி ரவுத்தேலா தேவையற்ற தொல்லை செய்வதாக விமர்சித்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். ட்விட்டர் யூசர் ஒருவர் தனது பதிவில், "இதுவே, ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு இதை செய்திருந்தால் அவர் ஜெயிலில் இருந்திருப்பார் அல்லது நெட்பிளிக்ஸில் அவர் பெயரில் க்ரைம் டாக்குமென்டரி வந்திருக்கும்" என்று விமர்சித்துள்ளார்.கவன ஈர்ப்புக்காக தேவையற்ற செயல்களை இவர் செய்கிறார் என ஊர்வசியை பலரும் திட்டி வருகின்றனர்.

மும்பை மருத்துவமனையில் ரிஷப் பண்டிற்கு காலில் ஏற்பட்ட தசை சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் ரிஷப் பண்ட்டின் சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.


First published:

Tags: Actress urvashi, Instagram, Rishabh pant