மன்னிப்பாயா பாடலை ரசிக்கும் த்ரிஷா... காதல் குறித்து வெளிப்படையான பதில்
"உங்களை பொறுத்தவரை காதல் என்றால் என்ன?" என்ற கேள்விக்கு ''அது பட்டாம்பூச்சி போன்ற உணர்வை கொடுப்பது என்றும் பதிலளித்துள்ளார்.

நடிகை த்ரிஷா
- News18 Tamil
- Last Updated: May 14, 2020, 5:44 PM IST
என் காதலை இன்னும் சந்திக்கவில்லை எனவும், காதல் பட்டாம்பூச்சி போன்ற உணர்வை கொடுப்பது என்றும் காதல் குறித்து நடிகை த்ரிஷா வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி இருக்கும் திரைத்துறை பிரபலங்கள் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அதில் நேரலையில் வந்து ரசிகர்களிடம் உரையாடும் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் நடிகை த்ரிஷாவிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில், விண்னைதாண்டி வருவாயா படத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் என்ன? என ரசிகர் கேட்ட கேள்விக்கு, அப்படத்தில் வரும் மன்னிப்பாயா பாடல் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அதேபோல்,"உங்கள் வாழ்க்கையின் காதலை கண்டறிந்து விட்டீர்களா?" என்ற மற்றொரு ரசிகரின் கேள்விக்கு, "இன்னும் என் காதலை சந்திக்கவில்லை' என பதிலளித்துள்ளார். மேலும், "உங்களை பொறுத்தவரை காதல் என்றால் என்ன?" என்ற கேள்விக்கு ''அது பட்டாம்பூச்சி போன்ற உணர்வை கொடுப்பது என்றும் பதிலளித்துள்ளார்.
உண்மை காதல் இன்னமும் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, உண்மையான காதல் இருக்கிறது எனவும், அது இல்லாமல் வாழவே முடியாது' என காதல் குறித்த கேள்விகளுக்கு கவித்துவத்துடன், வெளிப்படையான பதில்களை கொடுத்துள்ளார் த்ரிஷா.
கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி இருக்கும் திரைத்துறை பிரபலங்கள் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அதில் நேரலையில் வந்து ரசிகர்களிடம் உரையாடும் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் நடிகை த்ரிஷாவிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில், விண்னைதாண்டி வருவாயா படத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் என்ன? என ரசிகர் கேட்ட கேள்விக்கு, அப்படத்தில் வரும் மன்னிப்பாயா பாடல் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.