Trisha: தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை - சைக்கிளுக்கு மாறிய த்ரிஷா!

த்ரிஷா

த்ரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

  • Share this:
    நடிகை த்ரிஷா சைக்கிள் ஓட்டுவதற்கு தயாரான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார் த்ரிஷா.

    தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன், சுகர், சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தனது அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடியிருந்தார் த்ரிஷா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சைக்கிள் ஒன்றை ஓட்ட தயாரான நிலையில், ”நல்ல மனநிலையில் இருந்து ஒரு சவாரி, இது என்னோட புதிய விஷயம்” எனக் குறிப்பிட்டு அந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Trish (@trishakrishnan)






    பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் பிரபலங்கள் சைக்கிளுடன் ஃபோட்டோ போடுவது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. த்ரிஷாவும் மறைமுகமாக அதை தான் சொல்கிறாரா அல்லது யதார்த்தமான புகைப்படமா என சீரியஸ் டிஸ்கஷனில் ஆழ்ந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: