திருமணத்துக்கு ‘Yes’ சொன்ன த்ரிஷா!

பேபி எப்போதும் உன்னை விரும்புகிறேன். என் காதலை நீ ஏற்பாய் என்று முழங்காலிட்டு காதலரைப் போல் காத்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளலாம். இப்போது அது சட்டப்பூர்வமாகவும் அனுமதிக்கப்படுகிறது” என்று கூறியிருந்தார்.

news18
Updated: May 5, 2019, 3:17 PM IST
திருமணத்துக்கு ‘Yes’ சொன்ன த்ரிஷா!
த்ரிஷா
news18
Updated: May 5, 2019, 3:17 PM IST
நேற்று தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கும் த்ரிஷா, திருமணம் குறித்த கோரிக்கை ஒன்றுக்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

1999-ம் ஆண்டு மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற த்ரிஷா, ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக கூட்டத்தில் வந்துபோகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் லேசா லேசா, மௌனம் பேசியதே படங்களின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமான அவர், சாமி, கில்லி என அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்தார்.

ரஜினி, கமல், விஜய், அஜித்தில் தொடங்கி சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என இன்றைய தலைமுறை நடிகர்கள் என முன்னணி நாயகர்களுடன் நடித்த ஒரே நடிகை எனும் சிறப்பு அந்தஸ்து த்ரிஷாவுக்கு உண்டு.

த்ரிஷாவின் 36-வது பிறந்தநாளான நேற்று அவர் நடித்த 60-வது படமான "பரமபதம் விளையாட்டு" படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை சார்மி தனது ட்விட்டர் பதிவில், த்ரிஷா தன்னைக் கட்டிப்பிடித்து முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த பதிவில், "பேபி எப்போதும் உன்னை விரும்புகிறேன். என் காதலை நீ ஏற்பாய் என்று முழங்காலிட்டு காதலரைப் போல் காத்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளலாம். இப்போது அது சட்டப்பூர்வமாகவும் அனுமதிக்கப்படுகிறது” என்று கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்திருக்கும் நடிகை த்ரிஷா, நன்றி. உன்னுடைய கோரிக்கைக்கு ஏற்கெனவே நான் சம்மதம் தெரிவித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். த்ரிஷாவின் பதிலால் நடிகை சார்மியும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.ட்விட்டரில் நடைபெற்ற இந்த உரையாடலுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோ பார்க்க: 17 ஆண்டுகளாக முன்னணி நாயகியாக வலம் வரும் வசீகர நாயகி த்ரிஷா!

First published: May 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...