Trisha Krishnan: த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்? நடிகை கொடுத்த க்ளூ!

நடிகை த்ரிஷா

முன்பு திருமணமானால், அத்தோடு நடிகைகளின் திரைவாழ்க்கைக்கு என்ட் கார்ட் விழும். ஆனால், இப்போது அப்படியில்லை.

  • Share this:
    இரு தினங்கள் முன்பு, மே 4-ம் தேதி தனது 38-வது பிறந்தநாளை த்ரிஷா கொண்டாடினார். நாற்பதை நெருங்கும் அவருக்கு எப்போது திருமணம் என்பதே பிறந்தநாள் கிசுகிசுப்பாக அமைந்தது.

    நாலு வருடங்கள் நாயகியாக தொடர்வதே சவாலான திரைத்துறையில், பதினட்டு வருடங்களாக நாயகியாக கோலோச்சி வருகிறார் த்ரிஷா. சமீபமாக நாயகி மையப் படங்களிலும் நடிக்கிறார். த்ரிஷாவின் திருமணம் குறித்து பல வருடங்களாக பேசப்பட்டு வருகிறது. அவரும் ஒருமுறை தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்வதாக அறிவித்து, நிச்சயதார்த்தத்துக்குப் பின் அந்த உறவு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு திருமணப் பேச்சை த்ரிஷா எடுக்கவில்லை. த்ரிஷாவின் அம்மா உமா, இது குறித்து தனக்கு நெருங்கியவர்களிடம் கவலை தெரிவித்து வருகிறார்.

    த்ரிஷாவின் 38-வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் அவரது திருமணம் பேசு பொருளானது. த்ரிஷாவின் நெருங்கிய தோழியும், சில தெலுங்குப் படங்களில் த்ரிஷாவுடன் நடித்தவருமான சார்மி, த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், த்ரிஷா பேச்சிலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இது என குறிப்பிட்டிருந்தார். இந்த வருடத்தில் த்ரிஷாவுக்கு திருமணமாகிவிடும் என்பதையே அவர் இப்படி சூசகமாக தெரிவித்துள்ளார்.

    முன்பு திருமணமானால், அத்தோடு நடிகைகளின் திரைவாழ்க்கைக்கு என்ட் கார்ட் விழும். ஆனால், இப்போது அப்படியில்லை. திருமணமான நாற்பது பிளஸ்ஸில் இருக்கும் வித்யா பாலன், ராணி முகர்ஜி, மஞ்சு வாரியர் போன்ற நடிகைகள் தொடர்ந்து நாயகியாக நடிக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகும் பிஸியாக நடிக்கும் சமந்தா, தீபிகா படுகோன் போன்று ஒரு டஜன் பேரை சொல்ல முடியும்.

    த்ரிஷாவின் திரைவாழ்க்கையும் திருமணத்துக்குப் பிறகு தொடரும் என ரசிகர்கள் நம்பலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: