Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்கும் த்ரிஷா - வெளியானது போஸ்டர்

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்கும் த்ரிஷா - வெளியானது போஸ்டர்

த்ரிஷா

த்ரிஷா

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடிக்கும் த்ரிசாவின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் அறிமுகம் செய்துள்ளது. 

  • News18
  • Last Updated :
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெறும் குந்தவை கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு படக்குழுவினர் அறிமுகம் செய்துள்ளனர். 

கல்கி நாவலை மையமாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கிய இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து படம் குறித்த செய்திகளையும் கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஆதித்ய கரிகாலன், வந்திய தேவன், நந்தினி ஆகிய கதாபாத்திரங்களின் தோற்றங்களை வெளியிட்டனர்.



அந்த வரிசையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷாவின் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Also read... விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விளம்பர படத்தில் நடிக்கிறார் தமிழக முதல்வர்

இதைத்தொடர்ந்து அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவியின் தோற்றத்தை நாளை வெளியிடுகின்றனர். அதேபோல் நாளை மாலை 6:00 மணிக்கு பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Trisha, Ponniyin selvan

அடுத்த செய்தி