Home /News /entertainment /

பரபரப்பை ஏற்படுத்திய த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி… அந்த நபர் யாராக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வம்…

பரபரப்பை ஏற்படுத்திய த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி… அந்த நபர் யாராக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வம்…

த்ரிஷா

த்ரிஷா

Actress Trisha : 1983 மே 4ம் தேதி பிறந்த த்ரிஷாவுக்கு தற்போது 39 வயது ஆகிறது. திருமண தேதியை அவர் எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் யாராக இருக்கும் என ரசிகர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

    தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகாலமாக ஹீரோயினாக நடித்து வருபவர் த்ரிஷா. ரஜினி, கமல், அஜித், விஜய் என பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சியில்  உள்ளார் த்ரிஷா.

    சமூக நலனுக்காக செயல்படும் சில என்.ஜி.ஓக்களுக்கு விளம்பர தூதராகவும் த்ரிஷா செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் த்ரிஷாவை 36 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

    இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘கெட்ட குணம் கொண்டவர்கள் நம்மிடம் பேசுவதை நிறுத்தி விட்டால் அது நல்ல விஷயம். அது குப்பை தன்னாலேயே வெளியேறுவதைப் போன்றதாகும்’ என்று கூறியுள்ளார்.

    வயாகாம் கொடுத்த புகார்.. ’லால் சிங் சத்தா’ படத்தை இணையத்தில் லீக் செய்தவர்கள் கைது!

    இந்த பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷா குறிப்பிடம் நபர் யாராக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். த்ரிஷாவிடம் பேச்சை நிறுத்திய நபர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி


    த்ரிஷாவுக்கும், தொழில் அதிபர் வருண் மணியன் என்பவருக்கும் கடந்த 2015-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருப்பினும், இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணம் நின்றதுடன் நிச்சயதார்த்தமும் முறித்துக் கொள்ளப்பட்டது.

    இதன்பின்னர் தெலுங்கு நடிகர் ஒருவருடன் இணைத்து த்ரிஷா பேசப்பட்டார். 1983 மே 4ம் தேதி பிறந்த த்ரிஷாவுக்கு தற்போது 39 வயது ஆகிறது. திருமண தேதியை அவர் எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    3 குழந்தைகள்.. ஹேப்பியான லைஃப்.. வெளிநாட்டில் செட்டில் ஆன நடிகை சிந்து மேனன்!

    த்ரிஷா குந்தவை கேரக்டரில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம்தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு காணப்படுவதால் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்திருக்கிறார் த்ரிஷா.
    Published by:Musthak
    First published:

    Tags: Actress Trisha

    அடுத்த செய்தி