ஓடிடி நாயகியாகும் நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா

கரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

  • Share this:
த்ரிஷா நடிப்பில் பல படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. தயாரிப்பாளர் எதிர்பார்த்த தொகை அப்படங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால், சில படங்கள் வருடக்கணக்கில் பெட்டிக்குள் உள்ளன. அப்படி வியாபாரமாகாமல் இருந்த ஒரு படம், பரமபத விளையாட்டு. ஓடிடியில் சமீபத்தில் அப்படம் வெளியானது.

பரமபதம் விளையாட்டு தவிர, சதுரங்கவேட்டை 2, ராங்கி, கர்ஜனை என மேலும் மூன்று படங்கள் த்ரிஷா நடிப்பில் தயாராக உள்ளன. இதில் சதுரங்கவேட்டை 2 படத்தில் அரவிந்த்சாமி ஹீரோ. மற்ற இரு படங்களில் த்ரிஷாதான் நாயகன், நாயகி எல்லாம். இதில் கர்ஜனை இந்தியில் அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான என்ஹெச் 10 திரைப்படத்தின் தமிழ் தழுவலாகும். கரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும், த்ரிஷாவின் நாயகி மையப் படங்களுக்கு சொல்லிக் கொள்ளும்படியான மார்க்கெட் இல்லை. அதனால், அவர் நடித்திருக்கும் படங்களை ஓடிடியில் வெளியிட முடிவு செய்து அதற்கான முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில், லைகா தயாரிப்பில் த்ரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்தப் படத்தின் கதையை முருகதாஸ் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து கர்ஜனையும் ஓடிடியில் வெளியாக உள்ளது. அனுஷ்கா, நயன்தா போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நாயகி மையப்படங்கள் வெற்றி பெற்று லாபம் சம்பாதித்திருக்கின்றன. ஆனால், த்ரிஷா நடித்த எந்தவொரு நாயகி மையப்படமும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.
Published by:Sheik Hanifah
First published: