ஆக்‌ஷன் அட்வெஞ்சர்... மீண்டும் ஒரே படத்தில் இணைந்த சிம்ரன் - த்ரிஷா

முன்னதாக 1999-ம் ஆண்டு ரிலீசான ஜோடி படத்தில் நடிகை சிம்ரன்க்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார் த்ரிஷா.

ஆக்‌ஷன் அட்வெஞ்சர்... மீண்டும் ஒரே படத்தில் இணைந்த சிம்ரன் - த்ரிஷா
த்ரிஷா மற்றும் சிம்ரன்
  • News18
  • Last Updated: February 13, 2019, 8:47 PM IST
  • Share this:
சிம்ரன் - த்ரிஷா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் அஜித், விஜய், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன், திருமணத்திற்குப் பிறகு அதிகமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்த சிம்ரன் சிவகார்த்திகேயனுடன் சீமராஜா படத்திலும், ரஜினிகாந்துடன் பேட்ட படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்ரன் - த்ரிஷா இருவரும் ஒரே படத்தில் நடித்திருந்தனர்.

முன்னதாக 1999-ம் ஆண்டு ரிலீசான ஜோடி படத்தில் நடிகை சிம்ரன்க்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார் த்ரிஷா. ‘பேட்ட’ படத்தில் இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், இருவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் இல்லை. இந்தநிலையில் மீண்டும் சிம்ரன் - த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் கலந்து உருவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மார்ச் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இரண்டு முன்னணி நடிகைகள் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது? - வீடியோ

First published: February 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்