Home /News /entertainment /

ஜெயம் ரவி படத்தில் இணைந்த தான்யா ரவிச்சந்திரன்!

ஜெயம் ரவி படத்தில் இணைந்த தான்யா ரவிச்சந்திரன்!

தான்யா ரவிச்சந்திரன்

தான்யா ரவிச்சந்திரன்

ஜெயம் ரவி படத்தில் புதிதாக தான்யா இணைந்திருக்கிறார். இரண்டாவது நாயகியாக அல்ல, நாயகிக்கு இணையான வேடம் என்கிறது படக்குழு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கருப்பன் பட நாயகி தான்யா ரவிச்சந்திரன் ஜெயம் ரவியின் 28-வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ப்ரியா பவானி சங்கருக்கு எந்தவிதத்திலும் குறையாத அழகும், திறமையும் கொண்டவர் தான் தான்யா ரவிச்சந்திரன். ஆனால், ப்ரியா பவானி சங்கருக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் கால்வாசி கூட தான்யாவுக்கு கிடைப்பதில்லை. 2022-ல் ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் படத்திலேயே தான்யாவுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தை ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார், இதிலும் ஜெயம் ரவி தான் நாயகன். இது இவரது 28-வது படம் என்பதால் தற்காலிகமாக படத்தை JR28 என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். தூத்துக்குடியிலும் அதற்கு சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Also Read - AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

இந்தப் படத்தில் புதிதாக தான்யா இணைந்திருக்கிறார். இரண்டாவது நாயகியாக அல்ல, நாயகிக்கு இணையான வேடம் என்கிறது படக்குழு. ஜெயம் ரவியுடன் தான்யாவுக்கு டூயட்டும் உள்ளது. தான்யா நடிப்பில் விரைவில் மாயோன் திரைப்படம் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தொல்லியல்துறையில் பணிபுரிகிறவராக தான்யா நடித்துள்ளார். மாயோன் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்பது தான்யாவின் நம்பிக்கை. 2022-ல் ஜெயம் ரவி பட வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த வருடம் தான்யாவுக்கு சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Jayam Ravi, Priya Bhavani Shankar

அடுத்த செய்தி