ஹோம் /நியூஸ் /entertainment /

நவராத்திரி விழாவில் தமன்னா கர்பா நடனம்..! வைரலாகும் வீடியோ

நவராத்திரி விழாவில் தமன்னா கர்பா நடனம்..! வைரலாகும் வீடியோ

தமன்னா

தமன்னா

 நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட வீடியோவை  நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  பிரபல நடிகை தமன்னா பாட்டியா நவராத்திரி விழாவில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.  தமன்னா தமிழ், தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபலமான மற்றும் திறமையான நடிகைகளில் ஒருவர். தன் அழகு மற்றும் வலுவான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.

  நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. வடமாநில இந்த விழாவை மக்களை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நவராத்திரி விழா ஒன்றில் நடிகை தமன்னா பாட்டியா கலந்து கொண்ட வீடியோவை  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  அதில் தமன்னா ஊதா நிற சல்வார் உடை அணிந்திருக்கிறார். அங்கிருந்த ரசிகர்களுடன் உரையாடி தமன்னா அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர் அவருடைய கர்பா அசைவுகளையும் ஆற்றலையும் கண்டு அனைவரும் வியந்தனர். தமன்னா முழு மனதுடன் கர்பா செய்வதைக் காண முடிந்தது.

  மேலும் இந்த விழாவை அவர் மிகவும் ரசித்துக்கொண்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக, நாடுமுழுவதும் மக்கள் எந்த பண்டிகையையும் கொண்டாட முடியவில்லை. தற்போது நவராத்திரி விழா வடமாநிலங்களில் களைகட்டியுள்ளது. ரசிகர்கள் தமன்னாவை திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actress, Dance, Viral Video